3டி இதயம் உருவாக்கம்!

Monday, July 17th, 2017

கணனியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் 3டி பிரிண்ட் ஆனது மருத்துவ உலகிலும் பெரும் பங்காற்றி வருகின்றது. மேலும் பல்வேறு அங்கங்களையும் செயற்கையாக உருவாக்கி பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இதயம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ இதயத்தைப் போன்று தொழிற்படக்கூடிய இவ் இயத்தினைக் கொண்டு இலகுவாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை உலகம் முழுவதும் சுமார் 26 மில்லியன் வரையானவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறானவர்களக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான மாற்று இதயத்தினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள 3டி பிரிண்ட் இதயமானது இவர்களின் நோயைக் குணப்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளது. இந்த இதயத்தினை சுவிட்ஸர்லாந்தின் ETH Zurich நிறுவனத்தைச் சேர்ந்த குழுவே உருவாக்கியுள்ளது.

Related posts: