பொலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

Wednesday, April 12th, 2017

இந்தியாவை சேர்ந்த வேதியியலாளர் ஒருவர் கலிபோர்னியாவில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்துள்ளார்.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்(Indian Institute Of Science)-ஐ சேர்ந்த சுவாமிநாதன் ரமேஷ் என்பவரும், மெக்சிகனில் உள்ள எரிபொருள் சார்ந்த நிறுவனமும் சேர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீனிலிருந்து டீசலை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தின் அறிக்கையானது ஏப்ரல் 3-ம் திகதி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைப்பெற்ற 253 உலக மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது.

அன்றாடம் பயன்படுத்தப்படும் பாலிதீனானது கடலில் டன் கணக்கில் கொட்டப்படுகிறது. ஆண்டுக்கு எட்டு மில்லியன் அளவிற்கு பாலிதீனானது கடலில் இருந்து எடுக்கப்படுகிறது.இவ்வாறு கடலில் கொட்டப்படும் பாலிதீனானது கடலையும் அதில் வாழும் உயிரினங்களையும் பாதிக்கிறது.

இதற்கு தீர்வாக ரமேஷ், சர்வதேச கடல்களை சுத்தம் செய்யும் நிறுவனத்தின் இயக்குனர் ஜேம்ஸ் ஹோல்ம் என்பவருடன் இணைந்து PTF Units என்னும் நிறுவனத்தினை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலமாக பாலிதீனானது டீசலாக மாற்றப்படும் எனவும் இதனால் உலகில் உள்ள பாலிதீனின் அளவானது குறையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: