இன்சார்ட்-3 டி ஆர் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்!

Thursday, September 8th, 2016

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இது இந்தியாவின் 10-வது ‘ஜி.எஸ்.எல்.வி’ ராக்கெட் ஆகும். மாலை 4:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ முதலில் திட்டமிட்டு இருந்தது. இதற்கான 29 மணி நேர கவுண்டன் நேற்று காலை 11.10 மணிக்கு துவங்கியது. இந்த நிலையில், ராக்கெட் ஏவும் நேரம் 40 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டது.

 4.10 மணிக்கு பதிலாக 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சரியாக 4.50 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. வெற்றிகரமாக செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தபட்டதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் செயற்கைகோள் இன்சாட்-3டிஆர் வானிலை தொடர்பான தகவல்களை பெறுவதற்காக அனுப்பப்படுகிறது.ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள ‘இன்சாட்-3டிஆர்’ செயற்கைகோள் அதிநவீன வகையில் வானிலை தொடர்பான தகவல்கள், கடல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், ராணுவத்துக்கு தேவையான தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த செயற்கைகோளின் எடை 2,211 கிலோ ஆகும். பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைகோளில் நவீன பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.

novak copy

Related posts: