ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குள்ளர்கள் நகரம்

Tuesday, April 19th, 2016

விசித்திரமான குள்ளர்கள் வாழ்ந்த தடங்களுடன் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு பாலைவன நகரம், புரியாத புதிர்கள் நிறைந்த பூமியாக ஆராய்ச்சியாளர்களையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

பாலைவனத்தில் ஒரு வெளிப்படலமாக காணப்படும் இந்த நகரம் 1940 ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ’மகுனிக்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் சராசரி மனிதர்கள் வசிக்க முடியாத சிறிய களிமண் வீடுகள் ஒரு நகர் அளவுக்கு அமைந்துள்ளன. அந்த வீடுகளில் கதவுகள் அசைக்க முடியாமல் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளே இருப்பவர்கள் மீண்டும் வெளியே வரமுடியாமல் மூடப்பட்டிருக்கும் அந்த களிமண் கதவுகளின் நோக்கம் என்ன காரணத்திற்காக என்பது இன்னும் ஒரு புதிராகவே அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

இறந்தவர்களை, மீண்டும் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வீட்டின் உள்ளேயே வைத்து களிமண் கதவால் மூடிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் யோசிக்கப்படுகிறது.

ஈரான் நாட்டில் கெர்மன் மாகாணத்தில், ஷாஹ்தாத் என்னும் பழமையான நகரில் உள்ள பாலைவனத்தில்தான் இந்த குறுநகரம் காணப்படுகிறது. பல ஆச்சரியக் குவியலாகவே ஆய்வாளர்கள் முன் காட்சியளிக்கிறது.

‘Liliput city’ என்ற ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய நாவலில் வரும் சம்பவங்கள் இந்த நகரை பார்க்கும்போது பொருந்துகிறது.

மேலும், ’கல்லிவர்ஸ் ட்ராவல்ஸ்’ என்ற புத்தகத்திலும், ‘The Lord of the Rings’ என்ற திரைப்படத்திலும் வரும் கற்பனை ரசமான காட்சிகளை, கண்முன்னே நிஜமாக்கியிருப்பது போல இந்த தொல்லியல் கண்டுபிடிப்பு உள்ளது.

இந்த பாலைவனத்தில் நாகரீகமான நகரம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என 1946 க்கு முன்புவரை ஈரானியர்கள் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை என ’ஈரான் டெய்லி’ என்ற பத்திரிகை கூறுகிறது.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் 1946 ல் நடத்திய ஆய்வின்போது, லூட் பாலைவனத்தில் சில பாட்டரிகள் கிடைத்தன.

அதைக்கொண்டு ஆய்வை தீவிரப்படுத்தியதில், அந்த பாலைவனத்தில் ஒரு சிறிய நகரம் இருந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் தோண்டி கண்டுபிடிக்கப்பட்டன.

நாகரீகத்தில் தழைத்தோங்கிய மக்கள் மிகப்பழமையான காலத்திலே அங்கு வாழ்ந்திருக்கின்றனர் என்ற உண்மை அதன்பிறகே, உலகின் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த பகுதியில் (1948 – 1956) காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொல்லியல் துறைகள் சார்ந்த அகழ்வாய்வுப்பணி தீவிரமாக நடந்தது.

எட்டு இடங்களில் இலக்குவைத்து தோண்டப்பட்ட குழிகளில் செம்பு உலைகள் சேர்த்த 800 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நகரம் உயிரோடு இருந்த காலம் வரலாற்றுக் காலத்துக்கு முந்தையது. தோராயமாக, கி.மு. 4000 ஆண்டுகளின் பிற்பகுதியிலோ அல்லது கி.மு. 3000 ஆண்டின் முற்பகுதியிலோ, இங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம் என அங்கு கிடைத்த பொருள்களில் இருந்து வயது கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரம் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு ஒரு ஆட்சிமைக்கு உட்பட்டதாக பரவி இருந்துள்ளது. இந்த எல்லைகளுக்குள் பல இடுகாடுகளும் இருந்துள்ளன.

இங்கு குடியிருப்பு வீடுகள், உலைகள், கூரைகள், அலமாரிகள், கல்லறைகள், வீதிகள், உலோக கருவிகளை உருவாக்கும் பட்டறைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள் நடந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது.

குள்ளர்கள் வாழ்ந்த அந்த நகரத்தில் தங்க ஆபரணங்கள், இரும்பு, மற்றும் பித்தளை பொருள்கள் உட்பட நாகரீகத்தை உறுதிப்படுத்தும் பல பொருள்கள் கிடைத்துள்ளன.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

இங்குள்ள சுவர்களின் உயரம் அதிகமாக 80 செ.மீ., 190 செ.மீ., 5 செ.மீ. அளவில் இருப்பதால் 5 செ.மீ. உயரமே குள்ளர்களின் சராசரி உயரமாக இருந்திருக்கலாம் என ஷாஹ்பாத் நகர் அகழ்வாராய்ச்சி குழுவின் தலைவர் மிராபேதின் கபோலி கூறுகிறார்.

மேலும், இதுபோன்ற குள்ள மனித இனம் உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர். உதாரணமாக, மேற்கு ஐக்கிய நாடுகளில் உள்ள மொண்டானா, வியோமிங் மக்களை குறிப்பிடலாம்.

அவர்களின் முன்னோர்கள் ஏன் பழங்காலத்தில் இந்த ஈரானின் ஷாஹ்பாத் நகரில் வாழ்ந்துவிட்டு, ஏதேனும் இயற்கை பேரிடரால் இடம்பெயர்ந்திருக்கக் கூடாது?

அல்லது, 5 செ.மீ. உயரம் இருந்தவர்கள் அக்கால கட்டத்திலேயே அதிசயமாக 150 செ.மீ. உயரம் வரை வளர்ந்திருக்கலாம்.

பிறகு, இந்த 5000 ஆண்டுகளில் அந்த பரம்பரை சராசரி மனித உயரத்தை எட்டியதால் குள்ள அடையாளத்தை இழந்திருக்கலாம்.

அதனால், இடம்பெயர்வு மர்மம் தடம்தெரியாமல் போயிருக்கலாம் என்ற கருத்தையும் அந்த ஆய்வுக்குழுவினர் சுவாரஸ்யமாக வெளியிட்டுள்ளனர்.

அங்கு ஒரு மம்மி உருவமும் 2005 ல் கிடைத்துள்ளது. அதுவே குள்ளர்கள் நகரம் என்பதற்கான ஆதார அழுத்தமாகியிருக்கிறது. அதன் உயரம் 25 செ.மீ. உள்ளது.

ஆய்வில் ஈரானுக்குரியதான அந்த மம்மி, 17 வயதை எட்டியது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.அந்த மம்மியை திருடி, ஜெர்மனில் 80 பில்லியன் ரியாலுக்கு விற்க முயற்சித்த இரண்டு கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது கெர்மன் மாகாணத்தில் சமீபத்தில் தீவிரமாக பரவிவரும் செய்’தீ’ என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts: