மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக்!

Friday, December 21st, 2018

பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரில், 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது, மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த, சுமார் 68 லட்சம் பயனர்களின் புகைப்படங்கள் பிழையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு அம்பலமாகி இருந்தது என்றும், அந்த பிழை தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் சரி செய்யப்பட்ட இந்த பிழை செயலி டெவலப்பர்களுக்கு, பயனரின் மற்ற புகைப்படங்கள், அதாவது பேஸ்புக் ஸ்டோரிக்களில் பதிவிடப்பட்டவைக்கான அனுமதியை வழங்கியிருந்தது என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்த பிழை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய முயன்று, பின்னர் தொழில்நுட்ப கோளாறு மற்றும் இதர காரணங்களால் பதிவேற்றப்படாத புகைப்படங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

சமீப காலமாக பேஸ்புக் நிறுவனத்தில் பல்வேறு கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts: