ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரது பெயர் நிராகரிப்பு!

பிரான்சின் தலைநகரான, பாரிஸின் ஒரு வீதிக்கு , ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸின் பெயர் சூட்ட கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணையை, பாரிஸ் மாநகராட்சி உறுப்பினர்கள், நிராகரித்துள்ளனர்.
மாநகராட்சி அவையின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்களின் உறுப்பினர்கள் , ஆப்பிள் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாகவும் மோசமான பணி நடைமுறைகளை கைப்பிடித்து வருவதாகவும் குற்றம் சாட்டி இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
இதற்கு மாறாக, பாரிஸின் 13வது மாவட்டத்தின் பல புதிய வீதிகளுக்கு, பிரிட்டிஷ் கணினி வல்லுநரும், இரண்டாம் உலகப்போர் கால கதாநாயகனுமான, ஆலன் டூரிங் மற்றும், உலகின் முதல் கணினி மொழி எழுத்தாளர் என்று கருதப்படும் ஏடா லவ்லேஸ் ஆகியோரின் பெயர்கள் உட்பட வேறு பல பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
புற்றுநோயை அழிக்கும் முறைமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: பிரிட்டனிய ஆய்வாளர்கள் நம்பிக்கை
ஆபிரிக்க சாம்பல் கிளிகள் வர்த்தகத்திற்கு தடை!
மரணத்துக்கு பிறகும் உயிர்வாழ முடியும் - விஞ்ஞானிகள்!
|
|