UNP, SLPP கட்சியினரை இந்தியாவுக்கு வருமாறு அழைபு விடுத்த மோடி!
Friday, May 3rd, 2024
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு இந்திய பிரதரமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்தள்ளது.
இந்திய தேர்தல் முறை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ளவும், தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்பதாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி இந்தியாவில் தேர்தல் ஆரம்பமானது. இதன்படி இந்திய தேர்தல் ஏழு கட்டங்களாக எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் நடைபெறவுள்ளது.
இந்திய தேர்தல் முறைமை குறித்து வெளிநாட்டு அரசியல் கட்சிகளுக்கு தெளிவூட்டும் நோக்கில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி இந்த அழைப்பினை விடுத்துள்ளது.
மேலும், பத்து நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம்!
விமான சேவைகளுக்கான கட்டணங்கள் குறைப்பு?
இலங்கையின் உயரிய கௌரவம் பெற்றார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி – ரணிலுடனும் விசேட சந்திப்பு!
|
|
|


