GSP+ வரிச்சலுகையை இழக்கும் அபாயம்!

Monday, April 24th, 2017

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 52 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படக் கூடாதென இந்தக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை வழங்குவதற்கான நிபந்தனைகள், அரசாங்கத்தின் மறுசீரமைப்பு பிரயத்தனங்கள் ஊடாக நிறைவேற்றப்படவில்லை எனவும் ஐரோப்பிய பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கையின் தொழிலாளர் சட்டங்களிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், உண்மையான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் 751 உறுப்பினர்களுள் 376 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால், இலங்கை, ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் அபாயம் நிலவுகின்றது.

Related posts: