‘GSP +’ சலுகையை மீளாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!
Thursday, September 16th, 2021
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ‘GSP +’ சலுகையை நீடிப்பது தொடர்பில் முடிவெடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இம்மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார செயலாளரான ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி தொடர்பான பல்வேறு சர்வதேச மரபுகளை அமல்படுத்த ஒப்புக் கொண்ட பின்னரே இலங்கை GSP + சலுகையை பெற்றுக் கொண்டதுடன், இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு கட்டணமில்லா அணுகலை இலங்கை பெற்றுள்ளது.
அண்மையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்கு உள்ள வசதியை நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மேற்படி இலங்கைக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவானது அக்டோபர் 4 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல்!
கொழும்பிற்கு பிரவேசிக்கும் கனரக வாகனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!
மஹிந்த ராஜபக்ஷ புதிய சரித்திரம் !
|
|
|


