சகல பிரஜைகளுக்குமான டிஜிற்றல் பணப்பை மென்பொருள் – நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Monday, January 24th, 2022

டிஜிற்றல் தேசிய அடையாள அட்டைடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டுடுள்ளார்.

மேலும் கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தமது கைத்தொலைபேசியில் களஞ்சியப்படுத்துவதற்கான டிஜிற்றல் கட்டமைப்பு வசதியும் இதன் மூலம் கிடைக்கும் என்றும் அமைச்சர் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேவையான சந்தர்ப்பங்களில் எந்தவொரு சிக்கலும் இன்றி உரிய ஆவணங்களை டிஜிற்றல் முறையின் கைத்தொலைபேசி ஊடாக வழங்கும் வாய்ப்பு சகல பிரஜைகளுக்கும் கிடைக்கும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

கொரோனா வைரஸ் எதிர்பாராத நேரத்தில் வந்த ஒரு தொற்று நோய் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள சமுதாயம் பழக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய தலைமுறையினரோ அல்லது முந்தைய தலைமுறையினரோ உலகளாவிய தொற்று நோயை எதிர்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் கைத்தொழில் புரட்சி மற்றும் தொழில்நுட்பப் புரட்சி என்பன தொற்று நோய்களுடன் இணைந்துள்ள தாகவும், இந்தத் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் ஒரு சமூகம் ஒரு நாடாக முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: