80 ரூபாவுக்கு வெங்காயத்தை கொள்வனவு செய்ய தயார்: சதொச நிறுவனம்!
Tuesday, September 18th, 2018
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய சதொச நிறுவனம் தயாராகி வருகிறது.
வாழ்க்கைச் செலவு குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த வெங்காயத்தைக் கொள்வனவு செய்ய உள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பெரிய வெங்காயம் அறுவடை செய்யும் காலப்பகுதியில் கூடுதலான அளவு வெங்காயம் சந்தைக்கு வருகின்றது. அதனால் நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்க வாழ்க்கைச் செலவினக் குழு இணக்கம் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து சதொச நிறுவனம் வெங்காயத்தை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சர் சதொச தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!
தனியார் பாதுகாப்பு முகவர் நிலைய பதிவு, புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - ஜனாதிபதியினால் வர்...
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த உணர்வு ரீதியான செயற்பாடுகள் அவசியம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வ...
|
|
|


