தனியார் பாதுகாப்பு முகவர் நிலைய பதிவு, புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு – ஜனாதிபதியினால் வர்த்தமானியும் வெளியீடு!

Thursday, March 2nd, 2023

தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்கான பதிவுகளை புதுப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நிறுவனமொன்றை முதற்தடவையாக பதிவுசெய்வதற்காக இதுவரை நடைமுறையிலிருந்த 15,000 ரூபா கட்டணம் இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் 35,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக 50,000 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே இருந்த பதிவுகளை புதுப்பிப்பதற்கான கட்டணம் ஏற்கனவே 10,000 ரூபாவாக இருந்துள்ளது. அது 15,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 25,000 ரூபாவாக்கப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகும் போது அதன் முதல் மாதத்துக்கான தாமதக் கட்டணமான 10,000 ரூபாவும் அனுமதிப்பத்திரம் காலதாமதமாகி 31 – 90 நாட்களுக்கிடையிலான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 90 நாட்களைக் கடந்துள்ள தாமதக் கட்டணம் 35,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இந்த அனைத்து திருத்தங்களும் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வர்த்தமானிப் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: