8 ஆயிரம் மாணவர்கள் இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு !
Monday, July 1st, 2019
ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். ஏனைய வருடங்களிலும் பார்க்க மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 2 மடங்காக அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
தற்போது இந்தக் கல்லூரிகளில் 4200 பேர் பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.
Related posts:
தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தி!
2 ஆம் தவணைக்குப் பின்னர் மாணவர்களுக்குச் சீருடை!
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை - போக்குவரத்து அமைச்சு அற...
|
|
|


