உழைப்பாளர் தினம் நாளை – நாடுமுழுவதும் விசேட பாதுகாப்பு – 3,500 காவல்துறையினர் கடமையில் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!
Sunday, April 30th, 2023
நாளை (1) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களின் நிமித்தம் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மக்களே கெட்டுப்போயுள்ளனர் - மகிந்த தேசப்பிரிய!
ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் அமுலாக்கப்படும் - ஊடகத்துறை அமைச்சர்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
|
|
|


