திட்டமிட்டு புறக்கணித்ததாம் தமிழரசு கட்சி: யாழ்.பல்கலை மாணவர்கள் அதிருப்தி!

Saturday, November 4th, 2017

தமிழ் அரசில் கைதிகளின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை தமிழரசுக் கட்சி புறக்கணித்துள்ளமையானது திட்டமிட்ட செயற்பாடு என மாணவர்கள் விசனம் தெரித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக 3 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கதவடைப்பு போராட்டத்தை நடத்திவந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பேச்சுக்களை நடத்த வடக்கிலுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கமைய கலந்துரையாடலும் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவசக்தி ஆனந்தன், அங்கஜன் இராமநாதன் மற்றும் மாகாணசபை உறுப் பின்னர்களான சிவாஜிலிங்கம் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்..

குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் எவரும் இந்தப் கலந்துரையாடலில் எவரும் பங்கேற்கவில்லை. இது குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் கலந்துகொள்ளாத அனைவரும் தமிழின துரோகிகள் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: