மக்களை சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்த யாழ்.செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் – அச்சமின்றி தகவல்களை வழங்குமாறு அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2016

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்த மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்பட்டு வருகின்றார்கள். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை உடனடியாகவும் பக்கச்சார்பற்றமுறையிலும் நிறைவேற்றுவதற்கு மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது இவ் அலகிற்கு கடிதம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இக்குறைகேள் மையத்துக்கு பொதுமக்கள் தகவல் வழங்கும் போது சம்பவம் தொடர்பான துல்லியமான தகவல்களையும் புகைப்படம் காணொலி போன்ற ஆதாரங்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் தகவல்கள் தொடர்பாக இரகசியம் காக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் அவை தொடர்பான இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் துணிந்து தமது குறைகளை வழங்குவதற்கு பொதுமக்கள் குறைகேள் மையத்துக்கு நேரடியாகவோ மேலதிக அரசாங்க அதபரிடமோ       021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளுமாறும் தகவல் வழங்கும் பொழுது வழங்குநர் பற்றிய விபரங்களைப் பயமின்றி தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என யாழ்.மாவட்ட மேலதிக அராசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் தெரிவித்துள்ளார்.

1268

Related posts: