தேசிய உரக் கொள்கை திருத்த சட்டத்தை வகுக்க புத்திஜீவிகள் குழு – அமைச்சரவை அனுமதி!

Friday, March 6th, 2020

தேசிய உரக் கொள்கையொன்றுக்கான திருத்த சட்டத்தை வகுப்பதற்காக புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1988 ஆம் ஆண்டு இல 68 இன் கீழான உரம் முறைப்படுத்தல் சட்டத்தின் மூலம் உர இறக்குமதி, தயாரிப்பு வகுத்தல் மற்றும் விநியோக பணிகளை முறையாக முன்னெடுப்பதற்காக தேவையான உடனடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இதுவரையில் எந்தவித திருத்தத்திற்கும் உட்படுத்தப்படவில்லை. அத்தோடு தற்போதைய சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான வகையில் இந்த சட்டத்தை புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முறையான தேசிய உரக் கொள்கை பிரகடனம் இல்லை என்பதினால் இத்துறையில் முன்னேற்றத்திற்கு பாரிய தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தேசிய உரக் கொள்கையொன்றுக்கான திருத்த சட்டத்தை வகுப்பதற்காக இத்துறையில் புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும், இந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் பொதுமக்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு இறுதி திருத்த சட்டமூலத்தை வகுப்பதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts: