75 வீத தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லாத நிலை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

நாட்டிலுள்ள 352 தேசிய பாடசாலைகளில் 302 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்ராலின் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனை குறிப்பிட்டிருந்தார்.
தேர்ஸ்டன் கல்லூரியில் அதிபரொருவர் இல்லாதமை தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி கவலையை வெளிப்படுத்தியிருப்பதாக மேற்கோள்காட்டப்பட்டிருந்த ஊடக அறிக்கைகளை குறிப்பிட்டே ஆசிரியர் சங்கத் தலைவர் இதனை கூறியுள்ளார்.
வெற்றிடங்களை நிரப்புமாறு 2018 இல் விண்ணப்பங்கள், நியமனங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இப்போது இந்தப் பாடசாலைகளில் பதில் அதிபர்களே இருக்கின்றனர் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2012 மற்றும் 2015 இல் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சைகளும் இடம்பெற்றிருந்தன. ஆயினும் இந்தப் பதவிகளுக்கு நியமனங்கள் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்படாமல் தாமதிக்கப்படுவதே இதற்குக் காரணம் என்று ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாபியா ஒன்று பதில் அதிபர்களாக கடமையாற்றுவோரை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் முறையான நியமனத்திற்கு கோரிக்கை விடுப்பதற்குப் பதிலாக இந்தப் பதில் அதிபர்களை பாதுகாக்க முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த மோசமான நிலைமை நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் காணக்கூடியதாக இருக்கின்றது.
Related posts:
|
|