70 நீதிபதிகளுக்கு ஜனவரியில் இடமாற்றம்!

ஆண்டுதோறும் நடைபெறும் இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இடமாற்றம் வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த இடமாற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முன்வைப்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் - ,மோட்டார் வாகன போக்குவரத்து த...
குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டம் - பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக சிரேஷ்ட ...
அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன - கல்வி அமைச...
|
|