குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டம் – பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023

இலங்கையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆறு மாதகால விசேட வேலைத்திட்டமொன்றை பொலிஸார் முன்னெடுக்க உள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் ஊடாக் 6 மாதங்களுக்குள் இலங்கையில் குற்றச் செயல்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மைக் காலத்தில் பதிவாகியிருந்த குற்றச்செயல்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் வாழும் போதைப்பொருள் கடத்தல் காரர்களால் திட்டமிடப்பட்டவையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேலும் தெரிவித்துள்ளதாவது,

“குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர்.

அண்மையக் காலத்தில் தெற்கில் பதிவாகிய திட்டமிடப்பட்ட குற்றங்கள் வெளிநாடுகளில் வாழும் போதைப்பொருள் கடத்தல் காரர்களால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டவையாகும்.

மூன்று முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாகும்.

முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும், பாதாள உலகக் குழுக்களில் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உங்கள் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் அல்லது திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை பொலிஸாரிடம் வழங்குவாறு வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: