70 ஆண்டுகாலமாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர் தேடப்படவில்லை – ஜனாதிபதி

நாடு எதிர்கொண்டுவரும் தேசிய இனப்பிரச்சினைக்கு 70 அண்டுகாலமாக தீர்வு கிடைக்கப் பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று (10) இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த 70 ஆண்டுகாலமாக கடந்த அரசாங்கங்கள் தோல்வியுற்றுள்ளன.
கடந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென 70 ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. 1956 ஆம் ஆண்டு “செல்வ – பண்டா” ஒப்பந்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் டி.எஸ் சேனாநாயக்க கைச்சாத்திட்டார். 1960 ஆம் ஆண்டு டட்லி சேனாநாயக்க “டட்லி – சில்வா” ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டார். இவ்வாறு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முன்னாள் அரசியல் தலைவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை துரதிஷ்டவசமாக நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் பிரச்சினைகளில் உள்ள தார்மீக தன்மைகளை உணர்ந்துக்கொண்டு நாம் செயற்படும் போது எம்மை விமர்சிக்கின்றனர். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே நாம் இந்த தேசிய அரசாங்கத்தை எற்படுத்தியுள்ளோம். நாம் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என தெரிவித்துள்ளார்.
Related posts:
பாவனையாளர் முறைப்பாட்டு எண் அறிவிப்பு!
யாழ்ப்பாணம் - கொழும்பில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு !
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|