6 மாதத்துக்குள்  இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் கைது!

Wednesday, June 27th, 2018

இந்த ஆண்டின் இதுவரையான 6 மாத காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் மடக்கிக் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்தார்.

இலங்கையில் இலஞ்சம் வாங்கும் நடவடிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையிலேயே இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு மேற்படி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 21 பேரில் அரச தலைவர் செயலகத்தின் பிரதானி அரச மரக் கூட்டுத்தாபனத் தலைவர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த ஆண்டில் அதிகூடிய இலஞ்சமாக 2 கோடி ரூபா கோரப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த விடயத்திலேயே அரச தலைவர் செயலகத்தின் பிரதானி கைது செய்யப்பட்டார்.

அவருடன் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும்; கைதானார்.

இதுதவிர உதவிப் பொலிஸ் அதிகாரி உள்பட பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரும் ஆயுள்வேத திணைக்கள அதிகாரிகள் இருவரும் மதுவரித் திணைக்கள அதிகாரியொருவரும் இந்த 21 பேரில் அடங்குகின்றனர் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: