நான் எப்போதும் மக்களுக்கு சார்பானவன் : தேர்தல் தொடர்பில் தனித்து தீர்மானத்தை எடுக்க முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
Monday, April 20th, 2020
பக்க சார்பின்றி தேர்தல் தொடர்பான மக்களுக்கு மிக முக்கியமான தீர்மானத்தை எடுக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை எடுக்கும் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் முதல் அரசியலமைப்புத் திருத்தச்சட்டங்கள் வரை அனைத்து விடயங்களையும் ஆராய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மக்களுக்கு மிகவும் பொருத்தமான தீர்மானத்தை எடுக்க முயற்சிப்பேன் என்றும் அரசியலமைப்புச்சட்டம், மக்கள், கொரோனா வைரஸ் தொற்று நோய், அதிகாரிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நான் எப்போதும் அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு சார்பானவன். தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பான ஆணைக்குழுவில் கலந்துரையாட வேண்டும். என்னால், அது பற்றிய தீர்மானத்தை எடுக்க முடியாது எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


