ஒய்வு வயதெல்லையை அதிகரிக்க கோரிக்கை!

Thursday, August 4th, 2016

தற்போது தாதியர்கள் ஓய்வு வயது 60 ஆக உள்ள நிலையில் இதனை 63 ஆக அதிகரிக்குமாறே தாதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தாதியர் பயிலுனர் மாணவர்களை வருடமொன்றிற்கு 5000 பேராக இணைத்துக்கொள்ளுமாறும் இவர்கள் குறித்த கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நிலவும் தாதியர் பற்றாக்குறையானது நிவர்த்தி செய்யப்பட்டதும், தாதியர்களின் ஓய்வு வயதெல்லையை வழமைப் போல் மாற்றுமாறும் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களின் இந்தக் கோரிக்கையானது சுகாதார அமைச்சரிடம் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் ஆகியோரிடமும் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடுபூராகவும் 64,000 இற்கும் அதிகமான தாதியர்கள் சேவை நிமித்தம் தேவைப்படுவதாகவும், எனினும் தற்போது 30,000 தாதியர்களே கடமை புரிவதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: