5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை: தனியார் பேருந்து ஊழியர்கள் நிலை மிக மோசமாக மாறுகின்றது – யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கோரிக்கை!

Friday, May 1st, 2020

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சாரதி, காப்பாளர்கள் பாரிய இடரினை எதிர்நோக்கி வருவதாக யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் –

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்போது பேருந்து சேவைகள் யாவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்று வருகின்றது.

அதிலும் பேருந்தில் அரைவாசி ஆசனத்திற்கு மட்டுமே மக்களை ஏற்றுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனை நாம் செவிமடுத்து செயற்படும்போது தமது சாரதி காப்பாளர்கள் பாரிய கஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் எனவே அரசாங்கமானது இந்த விடயத்தை கருத்திற் கொண்டு தமக்கு இலகு கடன் திட்டம் அல்லது வேறு ஏதாவது மானிய அடிப்படையிலான உதவிகளை மேற்கொண்டு நமக்கு உதவி புரிய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் யாழ்ப்பாணத்தை பொருத்தவரைக்கும் 2500 இற்கும் மேற்பட்டோர் சாரதிகள் நடத்துனராக கடமையாற்றி வருகின்றார்கள். அவர்களில் அரைவாசி பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை. எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts: