மண்ணெண்ணெய் மற்றும் டீசல் நிவாரணம் வழங்க அரசு முடிவு!

Wednesday, May 16th, 2018

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வழங்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸாதெரிவித்துள்ளார்.

இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் 500 கோடி ரூபாவை செலவிடுவதாக அமைச்சர்தெரிவித்தார்.

மேலும் மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக  வெளியிணைப்பு மோட்டார் படகுகளுக்காக 35 கோடி ரூபாவும் பைபர் கிளாஸ் படகுகளுக்காக  337 கோடி ரூபாவும்  ஆழ்கடல் மீன்பிடிபடகுகளுக்காக  115 கோடி ரூபாவும்  செலவு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்தார். இது குறித்த செய்தி அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Related posts:


வாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை - பாதுகாப்பு அமைச்சு !
அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் - ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கான பரீட்சை நடத்தப் பட வேண்டும் ...
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு - இலங்கையில் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என துறைசார் அமைச்சர...