அதிபர், ஆசிரியர்கள் நாளை சுகவீன லீவுப் போராட்டம்?

Wednesday, July 25th, 2018

கல்விச் சேவைக்கு அரசியல் பழிவாங்கல் எனும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து நாளை 26 ஆம் திகதியன்று அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களையும் சுகவீன லீவுப் போராட்டம் மேற்கொள்ள ஒன்றிணையுமாறும் இதன்மூலம் கல்வியில் அரசியல் தலையீட்டை ஒழித்து தரமான கல்வியை உறுதிப்படுத்த பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் நியமனம் வழங்குவதை நிறுத்துவதற்காக நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை முன்னெடுக்க நாளை 26 ஆம் திகதி சுகவீன விடுகை எடுத்துப் பணியைப் புறக்கணித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துக் கல்விசார் ஊழியர்களையும் அழைக்கின்றோம்.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் போது ஊழியர்கள் சார்பாக எழக்கூடிய அனைத்துப் பிரச்சினைகள், சவால்களையும் எதிர்கொள்ள சகல பொறுப்புகளையும் கல்வியை பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தினருடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் பொறுப்பேற்கும்.

சகலரும் கல்வி நிர்வாகசேவை, ஆசிரிய கல்வியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, அதிகாரிகள் அனைவரும் அச்சமின்றி பணிப்பகி~;கரிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய கல்வியை அரசியல் மயப்படுத்துவதிலிருந்து விடுவித்துக் கொள்வதற்காக பொதுச் செயற்பாடொன்றில் இணைந்துள்ளோம். இதில் பெற்றோர்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம்.

எதிர்காலத்தில் எங்கள் சந்ததியின் கல்வியைத்  தரமானதாகப் பேணவேண்டுமாயின் இப்போராட்டத்திற்கு பெற்றோர்களும் கல்விச் சமூகமும் இணைந்து போராட வேண்டும்.

Related posts: