4000 தொழிலாழர்களுக்கு நிரந்தர நியமனம்!
Thursday, July 7th, 2016
இலங்கை மின்சார சபையுடன் இணைந்த மற்றும் மனித வலு குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதி முதல் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் இவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
Related posts:
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா..?
மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியல் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு!
நாட்டு மக்களுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
|
|
|


