37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் டொலர் செலுத்தி விடுவிக்கப்பட்டது – இரண்டு நாட்களில் டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் – வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022

டொலர் பற்றாக்குறை காரணமாக விடுவிக்க முடியாமல் இருந்த 37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய சிங்கப்பூர் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த கப்பலின் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு  நேற்றிரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றையதினம் குறித்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ர் ஒல்கா தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் இரண்டு நாட்களில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

000

Related posts:


சுற்றுச் சூழல் தூய்மையாக்கப்படும் வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – வேலணை...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - யாழ்ப்பாணம் – கிளிநொச்சி இடையே யாழ்.ராணி விசேட ரயில் சேவை இன்று காலைமுதல...
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவிப...