35 நாடுகளுக்கு ஏற்றுமதி – 21 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டிய இலங்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Saturday, January 14th, 2023

இலங்கை மதுபான வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த வருடத்தில் மட்டும் நாட்டிற்கு 21 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எமது நாட்டு உற்பத்தியான மதுபானம் உலகின் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், அதன் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் பெரும் வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்

அதற்கிணங்க கடந்த 2021 ஆம் ஆண்டு மதுபான ஏற்றுமதி மூலம் 20 மில்லியன் டொலர்களையும் கடந்த வருடத்தில் 21 மில்லியன் டொலர்களையும் வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து மேற்படி நாடுகளுக்கு சாராயம், தென்னஞ்சாராயம், பனங்கள்ளு போன்ற மதுபான வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தென்னங்கள்ளு மற்றும் கித்துள் கள்ளு ஆகியவற்றுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறந்த கேள்வி நிலவுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: