90 மில்லியன் ரூபாயை முறைகேடு – இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் குற்றப்புலனாய்வாளர்களால் கைது!

Friday, November 20th, 2020

இலங்கை உர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை உர கூட்டுத்தாபனத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து கார்பனைட் திரவ உரத்தை கொள்வனவு செய்தபோது 90 மில்லியன் ரூபாயை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தநிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டவரை பத்தரமுல்லை பகுதியில் வைத்து நேற்று குற்றப்புனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: