29 மீனவர்கள் அதிரடிக் கைது : முல்லைத்தீவில் பதற்றம்!
Wednesday, August 15th, 2018
முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மீனவ படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா வழங்கிய உறுதிமொழியை அடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு ௲ நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது 8 மீன் வாடிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீவைக்கப்பட்டது. இதனால் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் முற்றாக சேதமடைந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குப்பை தொடர்பான எந்தப் பொறுப்பும் சம்பிக்கவிடம் ஒப்படைக்கப்படவில்லை
திணைக்களங்களில் பணியாற்றும் 1000 பணியாளர்களுக்கு எரிவாயு விநியோகம் – நடைமுறையை மீறி லிட்ரோ எரிவாயு...
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்...
|
|
|
2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பயன்பாடு நிறுத்தப்படும் - மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரு...
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் - பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சந்திப்பு - சட்டவிரோத குடியேற்ற...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி - தேர்தல்கள் ஆணைக்...


