2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!.

Sunday, March 31st, 2024

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் கூடுதல் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான எழுதுபொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை ககுறிப்பிடத்தக்கது

000

Related posts: