25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­செய்­யப்­பட வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்­பி­ரிய!

Sunday, November 27th, 2016
அர­சியல் மாத்­தி­ர­மின்றி சகல துறை­க­ளிலும் பெண்களின்  பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு உள்­ளூ­ராட்சி மன்றங்களில் 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­துவம்  உறுதிசெய்­யப்­பட வேண்டும் – தேர்­தல்கள் ஆணையாளர்

இலங்கை ஆசி­ரியர் சங்­கத்தின் முன்னாள் தலைவர் எம்.என்.பிர­னாந்­துவின் 23 ஆவது நினைவு தின நிகழ்வு நேற்று கொழும்­பி­லுள்ள மக­ாவலி நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்பி­டு­கையில்,தற்­போது நாட்டில் அதி­க­ள­வான தொழில்­வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. எனினும், தாம் பொறுப்­பெ­டுக்கும் துறை­களில் அனை­வரும் பிர­கா­சிக்க வேண்டும். மேலும்  நாட்டின் அர­சி­யலில் பெண் பிரதிநிதித்துவம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்து வலுவடைந்­துள்­ளது. பாராளுமன்றம்,மாகா­ண­ச­பைகள், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்­களில் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது.

அரச சேவையில் 60 சத­வீ­த­மான பெண்கள் அங்கம் வகிக்­கின்­றனர். இருந்­த­போ­திலும் தொழிற்சங்க நட­வ­டிக்­கையில் அவர்­களின் வகி­பாகம் குறை­வா­கவே உள்­ளது. எனவே, எதிர்காலத்தில் பெண்கள் தொழிற்­சங்க  நட­வ­டிக்­கை­யிலும் முன்­னணி வகிக்க வேண்டும்.

மேலும், ஆசி­ரியர் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­களைப் பொறுத்த மட்டில், ஆசி­ரி­யர்கள் முதலில் மாண­வர்கள் மத்­தி­யிலும் ஏனைய ஆசி­ரி­யர்கள், அதிபர் மத்­தி­யிலும் தமது ஆத­ர­வையும் நல்லபிப்பிராயத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் தொழிற் சங்க நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 mahinda-deshapriya-575-056

Related posts: