24 மணிநேரத்தில் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று!

Friday, June 11th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 2 ஆயிரத்து 738 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை  2 இலட்சத்து 16 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரையில் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 238 பேர்  குணமடைந்துள்ளனர்.

அதேவேளை தொற்று உறுதியான 31 ஆயிரத்து 986 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் - நிதி இராஜாங்க அமைச்...
பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது - மத்திய...
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெ...