2,300 க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500 க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் !

Monday, December 25th, 2023

நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்துவது குறித்து, மூத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒரு பொதுமக்கள்குழு நிறுவப்பட்டுள்ளது.

அந்தந்த காவல்துறை பகுதிகளில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள், இந்த குழுக்களுடன் பாதுகாப்பை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்துமாறு பணிப்பாளர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், தேவைப்பட்டால் இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை நாடுமாறும் பொல்சாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஈ.பி.டி.பியின் வலி. தெற்கு வட்டார உறுப்பினர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் கலந்துரையாடல்!
தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த சுற்றிலா பயணிகள் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பயணிக்க அனுமதி - ...
அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் - சுகாதார அமைச்சர் சன்ன ஜ...