23 வேட்பாளர்கள் மாயம்: தொலைபேசி இலக்கங்களும் போலியானவை -தேர்தல்கள் ஆணைக்குழு குமுறல்!

Monday, September 2nd, 2024

இலங்கைத்தீவு இம்மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகியுள்ள வேட்பாளர்களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை என கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொது மக்களுக்கான கூட்டங்களை நடத்தி தேர்தல் நடவடிக்கைகளை நடத்தி செல்வது சுமார் 15 வேட்பாளர்கள் மாத்திரமே எனவும் அறியக் கிடைத்துள்ளது.

அதேபோல், குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள தொலைபேசி இலக்கங்கள் கூட போலியானவை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது

எவ்வாறாயினும், தற்போது பிரதான நான்கு கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது

000

Related posts: