முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக கட்டமைக்கப்பட்டுள்ளது ஈ.பி.டி.பி – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் வி.கே.ஜெகன்!

Thursday, February 16th, 2017

சமகால அரசியல் நிலைமைகளுக்கேற்ப எமது கட்சியின் கட்டமைப்புகளையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாற்றியமைத்ததுடன் கட்சியை முழுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாகவும் கட்டமைத்தள்ளார். இதன்படி கட்சியின் வளர்ச்சிக்கு மக்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை கூறி எம்மை உற்சாகப்படுத்தும்  விதமான செயற்பாடுகள் மேற்கொள்வது எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பிரதேச அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்நாட்டில் இயல்புச்சூழல் ஓரளவு தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளிப்படையாக கூறிவருகின்றமை நல்லதொரு சமிக்ஞையாக இருக்கிறது. இருந்த போதிலும் கடந்த காலங்களில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்கள் பேச்சு மற்றும் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை இழக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது.

இதன்காரணமாக ஒரு காலக்கட்டத்தில் மக்கள் தமது கருத்துக்களை வெளிக் கொண்டுவர முடியாததால் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருந்ததையும், மக்கள் அறிவார்கள். இவ்வாறான சூழ்நிலைகளில்தான் நடந்து முடிந்த பல அரசியல் படுகொலைகள் மீதான குற்றச்சாட்டுக்கள் எமது கட்சி மீது சுமத்தப்பட்டிருந்தன.

ஆனாலும் எம்மீது அரசியற் காற்புணர்ச்சி கொண்டவர்கள் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த போதிலும் அதன் உண்மைத் தன்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் கூட எமது கட்சியின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பெருமளவு மக்கள் சுதந்திரமாகவும் ஆக்கபூர்வமாகவும் தமது கருத்துக்களை முன்வைத்து கட்சியின் வளர்ச்சி தொடர்பில் காட்டிவரும் அக்கறை தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் இது எமது கட்சி தலைமைக்கும் கட்சியின் வளர்ச்சி பாதைக்கும் மேலும் உந்து சக்தியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்,உடனிருந்தனர்.

g

Related posts: