21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல் – இராணுவ தளபதி அறிவிப்பு!
Monday, May 17th, 2021
21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை நாளாந்தம் இரவு 11 மணி முதல் காலை 04 மணி வரை விதிக்கப்பட்ட இரவு நேர பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் மே 31 வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்டதைப் போலவே இந்த வார இறுதியிலும் நாடளாவிய ரீதியாக குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
கோவிட்டை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே - தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாது பெற வ...
3 இலட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு - நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீச...
சர்வமத தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!
|
|
|


