யாழ். மாநகர முதல்வர் தெரிவுக் கூட்ட ஒத்திவைப்பு நியாயமற்றது – உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக உறுப்பினர்கள் ஆட்சேபனை!

Thursday, January 19th, 2023

யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற வித த்தில் நடந்து கொண்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர், உள்ளூராட்சி ஆணையாளர் தன் தவறை நிவர்த்தி செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கைக்குச் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவுக்கான கூட்டம் இன்று, 19 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெற்ற போது கூட்டத்துக்கான கோரம் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு முறையற்றது என ஆட்சேபித்து இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய 20 உறுப்பினர்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கும், யாழ். மாநகர சபையின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் இன்னும் சீராகவில்லை : ஊரடங்குச் சட்டம் தொடரவேண்டும் - அரச மருத்துவ அதிகாரி...
நேர்மையான அரச அதிகாரி எவரும் தண்டிக்கப்படாத வகையில் அரசியலமைப்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் – ப...
அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணி...