2025 க்குள் நாட்டில் அனைவருக்கும் குழாய் நீரை விநியோகிக்க நடவடிக்கை – நீர் வழங்கல் அமைச்சு தெரிவிப்பு!
Saturday, November 26th, 2022
நாட்டின் சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சிய 40 சதவீதமானோருக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழாய் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அனைவருக்கும் நீர்’ என்ற இந்த வேலைத்திட்டத்திற்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த தொகையில் இதுவரை 176 பில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலா பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல்!
SMS தொடர்பில் எச்சரிக்கை - இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்!
பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் நாடாளுமன்றில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து ...
|
|
|


