பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் நாடாளுமன்றில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து பிரதமர்மஹிந்த ராஜபக்ச விஷேட உரை!

Tuesday, November 17th, 2020

நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான உரையை நிகழ்த்தியிருந்தார்.

இன்றையதினம் சமர்ப்பிக்கப்ட்ட வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன்சார் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதனடிப்படையில்; சமுர்தி பயனாளிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு 0.25  காப்பீட்டுத் திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை, கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அவர்களது போஷாக்கினை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜைய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக 18,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்முயற்சி பொருளாதார முறையை எதிர்வரும் 2 வருடங்களில் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளதுடன் தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800,000 மில்லியன் ரூபா நிதியுமு; ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துட்ன் கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம். பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை, அரசு வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெரும் வணிகங்களுக்கு வட் வரியை 8% க்கு மிகாமல் பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி விலக்களிப்பது என்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயபடும் என்றும் பாதீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: