சுற்றுலா பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

Wednesday, August 24th, 2016

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு. கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

50 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் நில்மினி நாணயக்கார மற்றும் மர்வின் பெர்னாண்டோபுள்ளே ஆகிய பணிப்பாளர்கள் இருவர் மீது நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளரான கித்சிறி ரணவக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் 57 இலட்சம் ரூபாவை ஊவா மாகாண சபை தேர்தலுக்காகப் பயன்படுத்தியமை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.

Related posts: