2024 ஆம் ஆண்டு இரண்டு பிரதான தேர்தல்கள் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Sunday, October 22nd, 2023
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், நேற்று(21) இடம்பெற்றது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு திருத்தம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!
கோதுமை மா விலை அதிகரிப்பு !
கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் - மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய ந...
|
|
|


