கோதுமை மா விலை அதிகரிப்பு !
Saturday, September 7th, 2019
நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாண் விலையானது நேற்று(06) நள்ளிரவு ரூபா 02 இனால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி விதானகே தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையினை நள்ளிரவு ரூபா 5 இனால் அதிகரிக்க பிரிமா தனியார் நிறுவனமானது தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாண வைத்தியசாலைகள் அபிவிருத்தி!
பாடசாலைகளை தற்போதைக்கு மீள திறக்கக் கூடாது - ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே...
தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் - ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நிய...
|
|
|


