2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Monday, November 6th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
கடந்த முதலாம் திக்தி ஆரம்பமான இந்த வருடத்தின் 3 ஆம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகின்றது.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை - அரசாங்கம்!
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அடுத்த மாதம்!
உறங்கிய அறையில் தீ – யாழ்ப்பாணத்தில் கணவனும் மனைவியும் பரிதமாக உயிரிழப்பு!
|
|
|


