70ஆவது அகவையில் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றம்!

Tuesday, October 3rd, 2017

 

இலங்கை நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை  முன்னிட்டு விசேட அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

 சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம்இ செயலாளர்கள் சபாநாயகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்இ முக்கிய பிரமுகர்கள் வருகைத்தந்த வண்ணமும் உள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தின் 70 வருட நிறைவை முன்னிட்டு முத்திரையும் வெளியிடப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் முதற் கூட்டமானது 1947ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்றது. இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற சபாநாயகர் பிரான்சிஸ் மொலமுரே ஆவார்.

Related posts: