2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

2023ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்
இடமாற்றங்களை வழங்குவதன் ஊடாக மாத்திரமின்றி கொள்கை ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிர்வாக சேவையில் 900 வெற்றிடங்கள் நிலவுகின்றன. 4 ஆயிரத்து 500 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன.
10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையான ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறவுள்ளனர். இதற்கு முன்னர் அவ்வாறு காணப்பட்டிருக்கவில்லை.
எனவே, ஆண்டின் முதல் 3 மாதங்களில் சகல வெற்றிடங்களையும் நிரப்ப வேண்டும் இதற்கான கொள்கை ரீதியான தீர்மானங்கள் அமைச்சரவையின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதியே 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் கல்வி ஆண்டு ஆரம்பமாகின்றது.
அதற்கு முன்னர் குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|