எரிபொருள் சீராக கிடைத்தால் மின் துண்டிப்பு ஏற்படாது – இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, March 4th, 2022

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சீராக விநியோகித்தால் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை கிடையாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இன்றையதினமும் நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் ஏழரை மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய இன்று காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 5 மணித்தியாலமும்,மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களும் மின் விநியோகம் சுழற்சி முறையில் துண்டிக்கப்படும்.

நேற்றையதினம்  தரையிறக்கப்பட்ட 37,300 மெற்றிக்தொன் டீசலில் 8000 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை மின் உற்பத்தி நிலையங்களின் நடவடிக்கைக்கு விநியோகிக்க வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை நாளைமுதல் மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள்,உராய்வு எண்ணெயை தடையின்றி விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: