2022 இல் இலங்கையில் 395 யானைகள் உயிரிழப்பு – சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டு!
Monday, January 9th, 2023
மற்றைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் யானைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும் என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கூறுகிறது.
2022 ஜனவரி முதல் டிசம்பர் 5ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 395ஆக உள்ளது.
இது ஒரு வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட யானைகளின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.
யானையின்-மனித மோதல் காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 2019ஆம் ஆண்டில் 207 யானைகள், 2020இல் 318 யானைகள் மற்றும் 2021இல் 375 யானைகள் இறந்துள்ளன.
இதேவேளை சுற்றாடல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான நிலைய அறிக்கையின்படி, இலங்கையில் தினமும் ஒரு யானை இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
உயர் கல்விக்கு புதியசட்டம்
காங்கேசன்துறை – கொழும்பு சேவையை ஜன.30 ஆரம்பிக்கிறது உத்தரதேவி!
கடந்த 36 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை - சீனாவின் ஹூபெய் மாகாணம்!
|
|
|


